வவுனியா வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!! நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் பொலிஸார்..!

வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் விபரீத முடிவால் நேற்றய தினம் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் குறித்த யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இளம்பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளிவராத நிலையில்,குறித்த பகுதியில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.