சிவாஜி படத்துல நடிச்ச அங்கவை, சங்கவையா இவங்க..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..வைரல் போட்டோஸ்..!!

2007 இல் இயக்குனர் ஷங்கர் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் தான் சிவாஜி.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படமாகும்.இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா சரண் நடித்திருப்பார் மற்றும் இவர்களுடன் இணைந்து விவேக், சுமன், வடிவுக்கரசி, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை மையமாக வைத்து வித்தியாசமான கோணத்தில் இந்த படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் ஷங்கர்.இப்படத்தில் சாலமன் பாப்பையாவின் மகள்களாக அங்கவை, சங்கவை என இரண்டு கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர்.

 

சிவாஜி திரைப்படத்தில் அங்கவை-சங்கவை காட்சி பற்றி அதிகம் பேசப்பட்டது.இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த அவர்கள் இருவருமே மிகவும் கருமையாக தோற்றத்தில் இருந்தார்கள்.ஆனால் நிஜத்தில் அவர்கள் மிகவும் அழகாக நல்ல நிறம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவையின் புகைப்படத்தை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.