லிட்ரோ எரிவாயு விலையில் இன்று முதல் மாற்றம்..!!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (01) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4,115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூபா 55 குறைக்கப்பட்டுள்ளது. அதனுடைய புதிய விலை 1,652 ரூபாவாகும்.மேலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.