நாடு திரும்பிய மனைவியின் செயலால் வீட்டுக்கு தீ வைத்த கணவன்..!!

குவைத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தான் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரை நாட்டுக்கு அழைத்து வந்ததால் குறித்த பெண்ணின் கணவர் கோபத்திற்குள்ளாகி வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.குறித்த சம்பவம் மொனராகலையில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் அப்பகுதியில் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,மனைவி குவைத் நாட்சிற்கு வேலைக்குச் சென்ற நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

இதற்கிடையில், மனைவி தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரான 80 வயது முதியவரை அழைத்து வந்ததால், கணவன்-மனைவி இடையே தங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.இதன்போது கணவன் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேகநபர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி எனவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தீ விபத்தில் காயமடைந்த குவைத் பிரஜை மற்றும் சந்தேக நபரின் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.பிபில பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தீயை அணைத்துள்ள போதும் , வீடு மற்றும் உடமைகள் பலத்த சேதமடைந்துள்ளது. இந்நிலையில் தப்பியோடிய கணவரை பொலிசார் தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.