ஜல்லிக்கட்டு காளையுடன் முட்டி மோதும் சிறுவர்கள்…வருங்கால வீரர்கள் ரெடி!!

0
49

tamil cinema : குழந்தைகளோடு சல்லிக்கட்டு விளையாடும் காளைமாடு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அடேய் என்னடா பண்றிங்க.. அது சல்லிக்கட்டு மாடுடா.. என இணையத்தில் பதிவிட்டுள்ளனர். மூன்று குழந்தைகள் ஒன்று சேர்ந்து பெரிய காளை மாட்டுடன் இணைந்து மாட்டின் கொம்பினை பிடித்துக் கொண்டு மாடு பிடி மாடு என கூறிக்கொண்டு விளையாடி மகிழ்கின்றனர். மழலை மனம் கொண்ட காலை மாடு அவர்களிடம் சேர்ந்து விளையாடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் பலரின் மனம் கவர்ந்துள்ளது.

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. புதுக்கோட்டை மாவட்டம் சல்லிக்கட்டின் “சொர்க்க பூமியாக “இன்றளவும் திகழ்ந்து வருகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.  புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.