எல்லமே பெருசா வேணும் என்ரதுக்காக இதுவுமா..? பாருங்க நீங்களும்..

0
87

tamil cinema : ஆடமிற்கு எல்லாமே மிகவும் பெரிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. ‘எனது யோசனைகளை புதிய உயரத்திற்கு உயர்த்துவது எனக்கு மிகுந்த நிறைவையும் திருப்தியையும் தருகிறது. எனது கனவுகளை நனவாக்குவது புதிய அற்புதமான விஷயங்களை முயற்சிக்க என்னைத் தூண்டுகிறது’ என்று உலகின் உயரமான சைக்கிள் வடிவமைப்பில் ஈடுபடக் காரணத்தைக் கூறுகிறார் ஆடம் ஸ்டானோவிச்.

சைக்கிள் வடிவமைக்கப் போகிறேன் என்று முடிவு செய்த பிறகு, முழு வடிவத்தையும் திட்டமிட்டு முடிக்கவே ஒரு மாதம் ஆனதாகத் தெரிவித்தார். பின்னர், அதற்கு உருவம் கொடுத்து வடிவமைக்க மற்றுமொரு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது. உலக சாதனையில் இடம்பிடித்த இந்த சைக்கிளை உருவாக்க முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்தியதாக ஆடம் தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட உயரம் இருந்தாலே, சரியாக பேலன்ஸ் செய்ய வராது. உதாரணமாக, உலகின் உயரமான மனிதரால் கால்களை வைத்து பேலன்ஸ் செய்து நடக்க முடியாது. ஸ்டிக் அல்லது வாக்கர் பயன்படுத்தித் தான் நடக்கிறார். அப்படி இருக்கையில் எவ்வாறு 7 அடி உயர சைக்கிளின் வடிவம் சரியாக பேலன்ஸ் தருவது போல இருக்க வேண்டும்.