24 September, 2022

ஊ அண்ட்டவா மாமா’ ! இவங்ககிட்டயும் பேமஸ் ஆகிட்டா..? என்ன ஆட்டம்

tamil cinema: சில வாரங்களாக வைரலாகி வந்த ஒரு துள்ளலான பாடல் தான் ‘ஊ அண்ட்டவா மாமா’ என்கிற தெலுங்கு பாடல். இந்த பாடல் தெலுங்கில் மட்டுமன்றி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா போன்ற வேறு சில மொழிகளிலும் ரிலீஸ் ஆகியது. எல்லா மொழிகளிலும் அந்தந்த ரசிகர்களை அதிக அளவு இந்த பாடல் மக்களை கவர்ந்தது.

இந்த பாடலை இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் செய்துள்ளனர். அவற்றில் மிக சில ரீலிஸ் மட்டுமே இந்த பாட்டை போன்றே மிகவும் பிரபலமாகி வந்தது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் புகழ் கிலி பால் அவர்களும் ‘ஊ அண்ட்டவா மாமா’ தெலுங்கு பாடலுக்கு சிறப்பாக நடனமாடி உள்ளார். இவர் தான்சானியா நாட்டை சேர்ந்தவர். இது போன்று பல பாடலுக்கு இவர் ரீலிஸ் செய்துள்ளார். தற்போது இந்த ரீலிஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

இதில் கிலி பால் சிறப்பாக நடனமாடி உள்ளார். அவரின் டான்ஸ் மூவ்ஸ் அந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வேறு ஒரு நாட்டை சேர்ந்தவர் இந்த அளவிற்கு இந்திய பாடல் ஒன்றிற்கு அசத்தலாக நடனமாடுவார் என்பதை யாருமே எதிர் பார்க்கவில்லை.

Share