tamil cinema : தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.
இந்த நிலையில் அவர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்பொழுது சிறுமி ஒருவர் தனக்கு பசிக்கிறது என கூறி எதாவது தரும்படி கேட்டுள்ளார். ஆனால் ராஷ்மிகா அவரை கண்டு கொள்ளாமல் எதுவும் இல்லை என கூறி அங்கிருந்து புறப்படுகிறார்.
மேலும் காரில் ஏறி அமர்ந்த பிறகும் சில குழந்தைகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே பின்னாடியே சென்றுள்ளது. ஆனாலும் ராஷ்மிகா அவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் சிரித்துக்கொண்டே டாட்டா காட்டி விட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் ராஷ்மிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.