கல்லூரி மாணவரை திருமணம் செய்து கொண்ட பேராசிரியை
அதிகாலை வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வங்கதேச பொலிசார் விசாரணை
வங்கதேசத்தில் மாணவனை கல்லூரி பேராசிரியை திருமணம் செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கைருன் நாஹர் (40) என்ற பெண் கல்லூரி பேராசிரியையாக இருந்தார். மமும் ஹுசைன் (22) என்ற வாலிபர் கல்லூரியில் படித்து வந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்தாண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டனர்.
அந்த சமயத்தில் இவர்களின் திருமணத்தை பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில் நேற்று கைரூன் தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பொலிசார் ஹுசனை கைது செய்துள்ளனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், அதிகாலை 4 மணிக்கு நான் படுக்கையில் இருந்து எழுந்து கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது என் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என கூறினார்.
இது கொலையா அல்லது தற்கொலையா மற்றும் கைருன் மரணத்திற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.