tamil cinema : பெண் குழந்தைகளுக்கு எப்போதும் அப்பா தான் ஸ்பெஷல். ஆண்களுக்கும் எப்போதும் தங்கள் பெண் குழந்தைகள் தங்கமீன் தான். அதைத்தான் ராம் தன் தங்க மீன்கள் படத்தில் ஒரு அழகான வசனம் மூலம் உலகெங்கும் உள்ள அப்பாக்களின் குரலாய் ஒலித்திருப்பார்.. ‘முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்பது மகள்களை பெற்றெடுத்த அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்’ எனக் கூறியிருப்பார்.
சிறுமிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக அவரது தலைமுடியை ஷேவ் செய்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ததற்கான வடுக்களும் உள்ளது. தலையில் சிறுமிக்கு தையல் போடப்பட்டுள்ளது.
தன் மகளுக்கு தைரியம் கொடுக்கவும். அவளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதை தெரிவிக்கும் வண்ணம் அவரது தந்தை தனது தலையை ஷேவ் செய்து தலையில் தையல் போட்டது போல் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் அந்த பாசக்கார தந்தை.
துருக்கியை சேர்ந்த ஃபிகன் என்ற ஆசிரியர் இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். போட்டோ கேப்ஷனில்.. சிறுமிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவளுடைய அப்பாவும் அதுபோலவே ஷேவ் செய்துக்கொண்டுள்ளார். என் கண்கள் கலங்குகிறது. எனப் பதிவிட்டுள்ளார். ஏராளமானார் இந்த புகைப்படத்தை ரீட்வீட் செய்துள்ளனர்.
