tamil cinema : இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, மடோனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் படத்தில் ஒரு ஹீரோயின் ஆக நடித்து பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இதற்கு முன்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
மேலும் கஸ்தூரி மான் மற்றும் தாம் தூம் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். ப்ரேமம் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், தெலுங்கு என களி, பிடா, தியா, மாரி 2, NGK உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
படங்கள் மட்டுமின்றி பாவக்கதைகள் என்னும் வெப் சீரிஸ்’சிலும் நடித்திருந்தார். தற்போது, ஷ்யாம் சிங்க ராய், விரட்டா பர்வம் உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். ஷ்யாம் சிங்க ராய் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ப்ரமோஷன்’காக தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சாய் பல்லவி.


