tamil cinema : Mr & Mrs கில்லாடிஸ், ஜோடி நம்பர் 1 சீசன் 9 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி.
தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, சித்தி 2 சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர், யுவராஜ் என்னும் நடன கலைஞரை திருமணம் செய்து, இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் காயத்ரி, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


