அச்சி அசல் காஜல் மாதிரியே இருந்தா அவங்க புருசன் குழம்பிர போறாரு..!

0
34

tamil cinema : காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு முன்னணி நடிகை இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் பலரும் மறுத்து விடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலுடன் காக்காமுட்டை படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் குடும்பத்துடன் காஷ்மீர் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

தற்போது அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் டி-ஷர்ட் அணிந்தபடி காபி குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இவருடைய சாயல் அப்படியே கஜோல் போல இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema