tamil cinema : கேரளத்தைப் பூர்விகமாக கொண்ட அனுபமா, மொழி, நாடு என அனைத்தையும் கடந்து ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘ப்ரேமம்’ திரைப்படத்தில் 3 முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர். அப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்ட இவர், தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். curly hair, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் கொண்டு ரசிகர்களை சொக்க வைக்கிறார் அனுபமா.

தற்பொழுது, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், ஆர்.கண்ணன் இயக்கும் ‘தள்ளிப் போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக ஒரு பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.
Decent ஆக, குடும்பபாங்காக தோன்றும் அனுபமா, சமீப காலமாக, செம்ம hot and style’ஆக மாறி வருகிறார்.
