tamil cinema : பிரபல இயக்குநர் மணி ரத்னத்தின் தயாரிப்பில் வெளியான ‘5 ஸ்டார்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், எதிரி, ஆட்டோகிராப், டான்சர் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
வரலாறு படத்தில் நடிகர் அஜீத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதன் மூலம், தமிழ் திரையுலகில் பெரிதும் மார்க்கெட்டை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பட வாய்ப்புகள் சரியாக அமையாமல், மலையாள திரைத் துறையில் ஒதுங்கிவிட்டார்.
தமிழ் மற்றும் மலையாளம் திரைப்பட உலகில் மம்முட்டி, ஜெயராம் போன்ற முன்னணி கதநாயகர்களுடன் நடித்த கனிகாவிற்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

திருமணமான பிறகு மீண்டும் மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கிய கனிகா, தமிழ் திரையுலகிலும் நாயகியாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கனிகா, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ முதல் கவர்ச்சியான புகைப்படங்கள் வரை விதவிதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
