என்னை விட்டுவிடுங்கள் வேண்டவே வேண்டாம்.. ஒதுங்கிய தமன்னா.!

0
33

tamil cinema : தென்னிந்திய சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. இவர் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ஷன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்திரா சுப்ரமணியம் இயக்கிய அந்த வெப்தொடரில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். கிரைம் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகி இருந்த அந்த தொடர் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. இதனால் தமன்னாவுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

இந்த வெப்சீரிஸில் நடிப்பதன் மூலம் அவருக்கு ஒரு படத்திற்கு கிடைக்கும் அளவுக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது. மேலும் நடிக்கும் நேரமும் குறைவு என்பதால் முடிந்த அளவு இதிலேயே சம்பாதித்து விடலாம் என்று தமன்னா மாஸ்டர் பிளான் போட்டுள்ளார். இதனால் அவர் தனக்கு வரும் பட வாய்ப்புகளை வேண்டாம் என்று முடிவு செய்து தற்போதுவெப் சீரிஸில் மட்டும் அதிக கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளார்.