ரொமான்டிக் படத்தில் ஹாலிவூட்டில் தடம் பதிக்கும் சமந்தா.!

0
40

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா.

நடித்தால் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளனர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, அவருக்கு இடையே ஆன்மீக சுற்றுலா சென்றார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள இவர் தற்போது காத்து வாக்குல ரென்டு காதல் என்ற அற்புதமான காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தாவுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

பாஃப்டா விருது பெற்ற வெல்ஷ் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் புதிய படத்தில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளார். படத்திற்கு லவ் அரேன்மென்ட்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.