tamil cinema : நேரம் படத்தில் நடித்து அதன்மூலம் திரையுலகில் அறிமுகமாகியவர் நடிகை அஞ்சு குரியன். Kavi Uddheshichathu மற்றும் Njan Prakashan என்னும் மலையாள மொழி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிக பரிச்சயம் ஆனவர் இவர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர், குறிப்பிட்டு சொல்லப்போனால், ப்ரேமம், ஓம் ஷாந்தி ஒஷானா, இக்லூ சமீபத்தில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி, மியூசிக் ஆல்பம் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இவர் சோசியல் மீடியா பக்கம் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.
தற்போது, மாடர்ன் ஸ்டைலிஷ் போட்டோஸ்களை பதிவிட்டுள்ளார்.


