6 October, 2022

தலைகீழாக எல்லாத்தையும் செய்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்..!

tamil cinema : போடா போடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய துவங்கின.

தற்போது வரலட்சுமி கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வரலட்சுமி, தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களையும் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தலைகீழாக யோகா செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ..

Share