tamil cinema : என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் அவர்களின் மகளாக நடித்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், இதற்கு முன்பே, நிறைய மலையாள மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
பின்னர், பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படத்தில் நயன்தாரா மகளாக நடித்தார். தமிழில் நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர், மீண்டும் விசுவாசம் திரைப்படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார்.
தற்போது, மாமனிதன் மற்றும் ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெப் சீரீஸ், மியூசிக் ஆல்பம், குறும்படங்கள் என நடித்திருக்கும் அனிகா, தற்போது இளம் வயது நடிகையாக மாறி தனது கிளாமர் மூலம் ரசிகர்களை திண்டாட வைத்து வருகிறார்.
தற்போது ஜிகு ஜிகு கோல்டன் உடையில் இவர் பதிவிட்டுள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது.

tamil cinema
Tags: an