முன்னாள் காதலியுடன் ஜோடி சேரும் சிம்பு, ஆர்வத்தில் ரசிகர்கள்

0
34

சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதையடுத்து தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு.

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் மஹா. இது ஹன்சிகாவின் 50வது படம். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் குடும்பக் கதையில் சிம்புவும், ஹன்சிகாவும் நடிக்கின்றனர். தற்போது இயக்கி வரும் நந்தா பெரியசாமி, ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

இதையடுத்து இயக்குனர் தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார். இப்படத்தில் நடிக்க சிம்பு, ஹன்சிகா இருவரையும் தயாரிப்பாளர் அணுகியதாக தெரிகிறது.

சிம்பு, ஹன்சிகாவும் இப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கு முன் சிம்புவும், ஹன்சிகாவும் வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

படத்தில் நடிக்கும் போது காதல் ஏற்பட்டு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். காதலால் பிரிந்தாலும் நட்பை தொடர்ந்த இந்த ஜோடி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகிற்கு வருகிறது.