tamil cinema : பாண்டா கரடிகளின் குறும்பு வீடியோக்கள் பல இணையத்தில் உலாவி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தற்போது மிருகக்காட்சிசாலையில் உள்ள பாண்டா கரடி குட்டிகளுக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் குழந்தைக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பது போல அந்த குட்டிகளுக்கு உணவளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாதுகாப்பபு ஆடைகள் மற்றும் முகக்கவசம் அணிந்துகொண்டு மரங்கள் அடுக்கப்பட்டுள்ள ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.
அவர் மடியில் சிறிய குழந்தையை போன்று பாண்டா கரடி குட்டி ஒன்றையும் வைத்திருக்கிறார்.
மேலும் அவருக்கு பக்கத்தில் மற்றொரு குழந்தை போல இன்னொரு பாண்டா கரடி குட்டியும் இருக்கிறது. இவர் மடியில் படுத்திருக்கும் அந்த குட்டிக்கு குழ்நதைகளுக்கு உணவளிப்பது போன்று ஃபீடிங் பாட்டில் மூலம் அதற்கு உணவளித்து கொண்டிருக்கிறார்.
அப்போது அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு குட்டி அந்த ஊழியரின் ஆடைகளை இழுத்து குறும்புடன் விளையாடுகிறது.
அடுத்ததாக அவருக்கு அருகில் மற்றொரு பாண்டா குட்டி அமைதியாக படுத்துக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சி தற்போது அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது.
Bottle feeding a baby panda.. pic.twitter.com/xNmYEjBXME
— Buitengebieden (@buitengebieden_) February 21, 2022