25 September, 2023

30 கிலோ வரை உடல் எடை இழப்பு!! ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா

டாப் நடிகர்களின் படங்களில் நடித்துவந்த ரோபோ ஷங்கர் இடையில் உடல்நலக் குறைவால் சுத்தமாக எடை குறைந்துவிட்டார். அவரைப் பார்த்த ரசிகர்கள் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆனது, என்ன இப்படி ஆகிவிட்டார் என ரசிகர்கள் வருத்தம் அடைந்தார்கள். பின் ரோபோ ஷங்கரே தான் இப்போது நலமாக இருப்பதாக கூறியிருந்தார்.

ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்குபெற்றிருந்தார். இவர் அண்மையில் தனது உடல் எடை 30 கிலோ வரை குறைத்துள்ளார்.

முதல் டயட் எப்போதும் வெந்நீர் குடிப்பது தானாம். பின் உடலுக்கு டீடாக்ஸ் பானம் மிக மிக அவசியம் என்பதால் வெந்நீரில் பட்டையை ஊற வைத்து குடிப்பது, சீரக தண்ணீர், தனியா தண்ணீர் போன்றவற்றையும் டீடாக்ஸ் பானமாக குடித்தாராம்.

வாரத்தில் 5 நாட்கள் புரோட்டீன், ஃபைபர், பழங்கள், கீரைகள், பச்சை காய்கறிகள், பயிர் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாராம். இதுதவிர வெர்க்கவுட், யோகா, வாக்கிங் என நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்வாராம்.

Share