24 September, 2022

ஒரு பெண்ணின் வலி – ஆண்களும் பெண்களும் பேச தயங்கும் ஒரு தலைப்பு ‍ வீடியோ

ன்னதான் நாகரிகம் வளர்ந்து விட்ட இந்தக் காலக்கட்டத்திலும், பெண்களின் மாதவிடாய்….அல்லது ஆங்கிலத்தில் பீரியட்ஸ் என்று சொல்லப்படும் வழக்கமான இயற்கை உபாதை பற்றி இன்னமும் வெளிப்படையாகப் பேச எல்லோருமே தயங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆண்களும், பெண்களும் அறிவுப்பூர்வமான பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாலும், மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதைத் தவிர்க்கவே நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம்.

பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்களுக்கு அனைத்து விவரங்களும் தெரிந்தாலும், பேசக் கூடாத ஒரு தலைப்பாகவே இன்னமும் அது இருக்கிறது. வளர்இளம் பெண்கள் தொடங்கி சுமார் 50 வயது வரையிலான பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதமும் நிகழும் ரசாயன மாற்றங்களும், இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் மற்றும் அழுத்தங்களை வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைப்பது மிகவும் கடினம்.

பல ஆண்கள், பெண்களின் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி இன்றைக்கும் கண்டுகொள்வதே இல்லை. அதற்கு பல ஆண்களும் தெரிவிக்கும் தன்னிச்சையான பதில், ‘ஒவ்வொரு மாதமும் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதுதானே’ என்பதாகத்தான் உள்ளது. ஆனால், சிலர் பெண்களின் மனரீதியான பிரச்னைகளைப் புரிந்து கொண்டு அந்த நாட்களில் உதவுவோரும் உண்டு.

அந்த நேரத்தில் ஒரு பெண் படுகின்ற வேதனைகளை அழகாய் கவிதை வடிவில் சொல்லும் ஒரு வீடியோ

Share