திருமணம் செய்தா இவ்வளவு தருவார்களா அங்கே..? இதுக்காகவே திருமணம் செய்வார்கள் போல..

0
30

tamil cinema : மத்திய இத்தாலியின் அமைந்துள்ள இந்த முக்கிய இடமான லாசியோ பகுதியில், வரலாற்று சிறப்பு மிக்க கட்டிட கலை நினைவு சின்னங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன.

இந்த நிலையில், இங்கு திருமணம் செய்ய வருவோருக்கு ரூ.1,67,000 வரை பரிசு தருவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

அதாவது வெளி நாட்டு ஈவெண்ட் நிறுவனங்கள் கேட்டரிங் பூ அலங்காரம் உள்ளிட்ட அதிகப்படியான திருமண செலவுகளுக்கு ரீபண்ட் அளிப்பதாக கூறியுள்ளது.

லாசி வித் லவ் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ள இந்தத் திட்டத்திற்குச் இத்தாலி அரசு சுமார் 10 மில்லியன் யூரோ அதாவது 83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டுப் பயணிகள் மூலம் அதிகப்படியான வர்த்தகத்தை உள்நாட்டு வர்த்தகர்களுக்கு உருவாக்கித்தர முயற்சி செய்துள்ளது.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் வருமானங்களை மீண்டும் எழுச்சி பெற வைக்க முடியும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

tamil cinema
tamil cinema