8 December, 2022

பப்ளிக்கில் வலுக்கட்டாயமாக‌ கையை பிடித்து இழுத்து பெண் செய்த காரியம்..!

tamil cinema :  வான்கூவரில் வாழும் Changqing Yu என்பவர், சென்ற வாரம், Richmondஇலுள்ள Tian Shi fu என்ற உணவகத்துக்குச் சென்றுள்ளார்.தனது காரை பார்க் செய்துவிட்டு, நடக்க முயன்ற Changqingஇடம், அருகில் நின்ற ஒரு காரில் இருந்த பெண் ஒருவர் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டுள்ளார்.

Changqing தனக்கு ஆங்கிலம் தெரியாது என மாண்டரின் மொழியில் கூற, அந்த பெண் தொடர்ந்து ஏதேதோ கேட்டுள்ளார். உடனே அந்த காருக்கு அருகில் சென்ற Changqing, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்று கூற, சட்டென Changqingஇன் கையைப் பிடித்த அந்தப் பெண், அவரது கையை இறுகப் பற்றிக்கொண்டு, அவரது கையில் நெக்லஸ் ஒன்றை அணிவிக்க முயன்றிருக்கிறார்.

அப்போதுதான் தன் கையில், அணிந்திருந்த 45,000 டொலர்கள் மதிப்புடைய ரோலக்ஸ் கைக்கடிகாரம் தனது கையிலிருந்து நழுவுவதைக் கவனித்துள்ளார்

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் அந்த வாட்சை பறித்துக்கொள்ள, சாரதி இருக்கையில் அமர்ந்திருந்த நபர் உடனே வேகமாக அங்கிருந்து காரை நகர்த்திச் சென்றுள்ளார்.பொலிசார் இந்த நவீன திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.