ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கொத்துரொட்டி,சோறு, அப்பம்…!

0
25

tamil cinema : நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படாவிட்டால் மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்து அருகில் விறகுகளை பயன்படுத்தி கொத்து ரொட்டி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்களால் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் நாட்டிலுள்ள 80 சதவீத உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவகத் துறைக்கு மிகவும் சோகமான காலம் வந்துள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கொத்து ரொட்டி மாத்திரமின்றி விறகு பயன்படுத்தி சோறு, அப்பம் தயாரிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உடனடியாக தீர்வு வழங்குமாறு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.