அடாத மழையில் வெள்ளத்தில் சென்று சாக்ஷி என்ன செய்தார் தெரியுமா?

0
31

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால். ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களையும் கவர்ந்தார்.

சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் சிண்ட்ரெல்லா, அரண்மனை 3. மேலும் நான் கடவுள் இல்லை படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்தச் சூழலை எதிர்கொண்டு அடுத்ததாக ‘தி நைட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டப்பிங் பணிக்காக அடாத மழையில் தண்ணீர் நடந்து சென்று தனது வேலையை முடித்து இருக்கிறார். தற்போது இதன் புகைப்படங்கள் சமூக வலைத் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.