29 November, 2022

நானும் சாதாரண மனிதன் தானே, எனக்கும் அது இருக்கு..!

tamil cinema : மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடித்துவந்த படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள்.

இந்த பீஸ்ட் படத்தில் எத்தனையோ கலைஞர்கள் நடித்துள்ளார், அதில் முக்கிய வேடத்தில் மலையாள சினிமா நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடித்துள்ளார்.

அவர் படம் குறித்து கொடுத்து ஒரு பேட்டியில், என்னுடைய அம்மா பீஸ்ட் படப்பிடிப்பிற்கு வந்தார்கள். அவர்களிடம் விஜய் சாரிடம் ஒரு விஷயம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறி அவர் எப்போதும் அமைதியாகவே உள்ளார், கோபம் கொண்டதை நான் இதுவரை பார்க்கவில்லை என்றேன்.

உடனே எனது அம்மா இதுபற்றி விஜய் அவர்களிடம் கேட்டார், அதற்கு அவர், நானும் சாதாரண மனிதன் தான். எனக்கும் கோபம் வரும், ஆனால் அதை நான் கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று கூறினார்.

அதிகாரமும், பணமும் உள்ள ஒரு மனிதன் கோபத்தை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை, விஜய் அவர்களுக்கு சூப்பர் பவர் உள்ளது என ஷைன் டான் பெருமையாக பேசியுள்ளார்.

Share