கண்ண மூடுறதுக்குள்ள நான் உங்கள பாத்துரனும்…பாட்டியம்மா எழுதிய கடிதம்

0
35

tamil cinema : நாமக்கல், மோகனுரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் விஜய்க்கு தனக்கு உதவி செய்யுமாறு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். விஜயின் முகவரி பாட்டிக்கு தெரியாததால் அவருக்கு தான் எழுதிய இந்த கடிதத்தை அனுப்பமுடியவில்லை என பேரனிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த செய்தி ஒரு நியூஸ் 7 தொலைக்காட்சி மூலம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. இதையறிந்து அந்த மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் விரைவாக செயல்பட்டு, அவருக்கு ஒரு மதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், ரூ.5,000 பணம், சேலைகள் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் விஜய் அவர்களை தான் கண் மூடுவதற்கு முன்பாக பார்த்திட வேண்டும், நீங்கள் தான் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று காணொளியில் அவர் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல்.

இதுபோல பல கோரிக்கைகள் விஜய்க்கு வந்த போது, நிறைய பேரை சந்தித்துள்ளார். அதேபோல இந்த பாட்டியின் கோரிக்கையையும் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.