tamil cinema : உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் ரஷ்ய படைகளால் பெண்கள் பல மணிநேரம் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக கார்கிவ் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி. மரியா மெசென்ட்சேவா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு தேசம் அமைதியாக இருக்காது என்று எச்சரித்துள்ளார்.
தலைநகர் கீவுக்கு வெளியே உள்ள ப்ரோவரி ரேயோனில் உள்ள ஒரு கிராமத்தில், ரஷ்ய வீரர் ஒருவர் பெண்ணின் கணவனை சுட்டுக் கொன்றுவிட்டு, அவரை தனது குழந்தையின் முன்னிலையில் பலமுறை சீரழித்த சம்பவம் தெரியவந்ததை அடுத்து, மரியா இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்று பல பெண்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அதைப் பற்றி பேசத் தொடங்கும்போது அது பகிரங்கமாக இருக்கும் என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட ராணுவ வீரரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட் நீதிமன்றத்தில் கிடைத்துள்ளதாகவும் வெனெடிக்டோவா தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு, டெலிகிராம் மற்றும் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் ரஷ்ய வீரர் ஒருவர் தனது பைகளில் இருந்து ஒரு சில ஆணுறைகளை வெளியே எடுக்கும் காட்சி இருந்தது.

