tamil cinema : தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளியான வாத்தியார் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஆஷ்லியா மோனாலிசா.இந்த படத்தில் அர்ஜுன், மாளவிகா கபூர், பிரகாஷ் ராஜ், வடிவேலு போன்ற பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆஷ்லியா மோனாலிசா.
இவர் முதன் முதலில் பேஜ்புரி மொழியில் அறிமுகமானார்.இவர் அதிகப்படியான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவரின் நிஜ பெயர் அந்தாரா பிஸ்வாஸ் ஆனால் சினிமாவிற்காக ஆஷ்லியா மோனாலிசா என்று மாற்றிக்கொண்டார். இவரை ஆஷ்லியா மோனாலிசா என்றால் தான் ரசிகர்களுக்கு தெரியும். சினிமாவில் ஆஷ்லியா என்ற பெயரின் மூலம் தான் அறிமுகமானார்.இவர் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இதன் மூலம் இவருக்கு சில தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.