tamil cinema : சிறு சிறுக சேமித்த 2,50,000 இலட்ச ரூபாயை சில்லரையாக கொடுத்து பைக் வாங்கிய நபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் பூபதி. இவர் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு சிறுவயது முதலே விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை.

அதற்காக சிறு சிறுக நாணயங்களை சேர்க்க ஆரம்பித்துள்ளார். முதலில் ஐந்து ரூபாய் நாணயங்களை சேர்த்தவர் பிறகு ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு இருசக்கர வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் தங்களால் முடிந்த அளவிற்கு ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்துள்ளார்.
இதனையடுத்து, அதிகளவில் நாணயங்களை சேர்க்க பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஒரு ரூபாயை சேகரித்துள்ளார். இரண்டரை லட்ச ரூபாய் சேர்த்தபின் வாகனம் வாங்க முயற்சி எடுத்துள்ளார்.
இதனால் பல ஷோரூம்களை தேடி அழைந்துள்ளார். எந்த ஷோரூமும் சம்மதிக்காததால், கடைசியில் அம்மாபேட்டை பகுதியில் உள்ள பஜாஜ் ஷோரூம் சென்று ஒரு ரூபாய் தன்னுடைய விருப்பத்தை எடுத்துக்கூறி ஒரு ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் அதிகாரிகள், முதலில் மறுக்க பிறகு பூபதியின் பின்னணியை அறிந்த வாகன விற்பனை உரிமையாளர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, தான் சேகரித்து வைத்த ஒரு ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாக கட்டி அம்மாபேட்டை பகுதியில் உள்ள இரு சக்கர வாகன விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு மூட்டை மூட்டையாக தரையில் கொட்டி இரண்டு லட்ச ரூபாயைத் தனது நண்பர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களை கொண்டு எண்ண தொடங்கி சுமார் 10 மணி நேரம் ஒரு ரூபாய் நாணயத்தை எண்ணி நிறுவன அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
மேலும், அவருக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, பேசிய பூபதி இளம் வயது முதலே சிறுக சிறுக சேமித்து வைத்ததாகவும், ஒரு ரூபாய் நாணயங்களை தேடித்தேடி சேகரித்து புதிய அனுபவத்தை கொடுத்ததாகவும், அப்போது கடுமையாகவும் சவாலாகவும் இருந்தது எனக்கூறியுள்ளார்.