அகல்யாவுக்கு திருமணம், மாப்பிளை யாரு தெரியுமா?

0
33

ஆதித்யா காமெடி சேனலின் தொகுப்பாளினி அகல்யா. நீங்க சொல்லுங்க டூட் ஷோ மூலம் அவர் மிகவும் பிரபலமானவர்

அகல்யாவுக்கு இந்த‌ நிகழ்ச்சி மூலம் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் அவரது கலகலப்பான பேச்சு அனைவரையும் உத்வேகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் அகல்யா. நிச்சயதார்த்த விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிச்சயதார்த்த புகைப்படங்களை அகல்யா தனது சமூக வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

அகல்யாவின் வருங்கால கணவர் அருண் சென்னையில் துணை ஆய்வாளராக உள்ளார். இருவரும் காதலித்து தற்போது திருமணம் செய்து கொள்கின்றனர்.

இவர்களின் நிச்சயதார்த்த விழாவிற்கு இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து தீனா, வி.ஜே.லோகேஷ் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இவரை பார்த்த ரசிகர்கள் திருமணம் எப்போது என்று ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.

தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய அகல்யா தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தல அஜித்தின் தங்கையாக சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறாராம் அகல்யா. திருமண செய்தியை கேட்டு வரும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.