நாலு கெட்டவார்த்தை பேசி பட வாய்ப்பு பெற்ற நடிகை…என்ன அந்த கெட்ட வார்த்தை

0
16

tamil cinema : இது நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு பா என்று சொல்லும் அளவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய நடிப்பின் மூலமாக மக்களை கவர்ந்தவர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷுடன் வட சென்னை படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில் இந்த வடசென்னை படத்தின் ஆடிஷன் டைமில் நடிகை சமந்தா, அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் ஆடிஷன் முடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது நானும் வெற்றிமாறன் சாரின் ஆபிசுக்கு போனேன். திடீரென்று உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் என்னிடம் பேசி காட்டு என்று வெற்றிமாறன் சொன்னார். அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன் வெற்றிமாறன் சார், நான் எப்படி பேசுவது, அதுவும் உங்கள் முன்னாள் என்று தயங்கி கேட்டேன். அதற்கு பக்கத்தில் இருந்த செல்வம் நீ பேசு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

பிறகு வெற்றிமாறனும் தைரியம் கொடுத்தார், திடீரென திரும்பி எனக்கு தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பேசினேன். அப்போது வெற்றிமாறன் வெளியே வேகமாக சென்று விட்டார், நான் பயந்து போய் ஓடி சார் என்ன ஆச்சு என்று கேட்டேன். அப்புறம் பத்மா வடசென்னை சூட்டிங்கில் தயாராகிவிடு என்று கூறினார்.

அந்த தருணத்தில் அதிர்ச்சி கலந்த சந்தோஷமாக எனக்கு இருந்தது. மேலும் நடிகர் தனுஷும் நான் இந்த படத்தில் அப்படி எல்லாம் பேசும் போது என்னை ஊக்கப்படுத்தினார்.