இனி எதுவுமே வேண்டாம்..என்ன விட்டுருங்க என சமந்தா..!

0
20

tamil cinema : பொதுவாக நடிகைகள் திருமணத்திற்க்கு பிறகு மார்க்கெட் இழந்துவிடுவார்கள். ஆனால் அந்த எழுதப்படாத விதியை தகர்த்தவர் சமந்தா.

திருமணம் ஆன பின்பும் அவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டிருந்தார். அதனாலேயே அவர் குழந்தை கூட பெற்றுக்கொள்ளவில்லை என விமர்சிக்கப்பட்டது. அதன் பிறகு சென்ற வருடம் சமந்தா திடீரென நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து ஷாக் கொடுத்தார்.

அவருடன் இனி எந்த தொடர்பும் தேவையில்லை என முடிவெடுத்து முன்னாள் கணவரை இன்ஸ்டாகிராமில் unfollow செய்துவிட்டார். மேலும் திருமண புடவையையும் திருப்பி நாகார்ஜூனா வீட்டுக்கே அனுப்பி இருக்கிறார் அவர்.

இந்நிலையில் அடுத்து சமந்தா தனக்கு தென்னிந்தியாவே வேண்டாம் என நினைத்துவிட்டார் போல. அவர் விரைவில் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆக போகிறார் என தகவல் பரவி வருகிறது.

மும்பையில் கடற்கரை அருகில் அவர் வீடு பார்த்திருக்கிறார் என்றும் அதை 3 கோடி ருபாய் கொடுத்து வாங்க போகிறார் என தகவல் பரவி கொண்டிருக்கிறது.

tamil cinema
tamil cinema