இடுப்பில் கை வைத்ததற்காக சேப்டி பின்னால் தண்டனையா..?

0
19

tamil cinema : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன் தினம் பெண் வழக்கறிஞர் ஒருவர் தனது தாயுடன் வேலுார் மாவட்டம் காவேரிப்பாக்கத்துக்கு பயணம் செய்ய அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த இளம் பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னாலிருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் கையை நீட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

tamil cinema
tamil cinema

இதனால் ஆவேசம் அடைந்த பெண் வக்கீல் தன்னிடமிருந்த ஊக்கை வைத்து அந்த நபரை குத்தினார். இதை தனது மொபைல் போனில் வீடியோவாக படம்பிடித்ததோடு, காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வானகரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியநிலையில், பேருந்தில் சில்மிஷம் செய்த நபரை பொலிசார் கைது செய்தனர்.

அப்போது அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் பெயர் ராகவன் என்பதும் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காமுகன் ராகவனை சிறையில் அடைத்தனர்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காமுகனை தைரியமாக ஊக்கை வைத்து குத்தி படம் பிடித்தற்கு பல்வேறு தரப்பினரும் காவல்துறையினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.