8 December, 2022

நொடியில் குழந்தையை காப்பாற்ற ஹீரோவாக மாறிய பூனை..!

tamil cinema : வீட்டில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பூனை, நொடியில் ஹீரோவாக மாறி குழந்தையை காப்பாற்றுகிறது.

அதாவது, அந்த வீடியோவில் குழந்தையும் பூனையும் இருக்கின்றனர்.

பூனை ஒருபுறம் விளையாடிக் கொண்டிருக்க, குழந்தையும் விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் இருப்பது போல் தெரியவில்லை.

https://twitter.com/i/status/1494425088992903168

ஷோபா மீது அமர்ந்து கொண்டிருக்கும் குழந்தை பின்னர் அதில் இருந்து இறங்கி கீழே விளையாடுகிறது. அப்படியே தத்தி தத்திச் சென்று ஓர் இடத்திற்கு சென்று கீழே இறங்க முயற்சி செய்கிறது.

அந்த நொடியில் ஷோபா மீது இருந்த பூனை ஓடி வந்து அங்கு கீழே விழ இருந்த குழந்தையை தூக்கிப் பிடித்து தடுக்கிறது.

பூனையின் இந்த செயல் காண்போரை வியக்க வைத்துள்ளது.

Share