இயக்குனரின் வில்லங்கம், மாநாடு படத்தில இத்தனை இடத்தில் நயன்தாராவா? யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க‌

0
32

சில காலமாக தமிழ் சினிமா படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு, தற்போது உடல் எடையை குறைத்து பிரமாண்டமாக பிரவேசித்துள்ளார். தற்போது சிம்பு நடித்த மாநாடு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிம்பு ஒரு படத்தில் நடித்தால் அதில் சிக்கலுக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் மாநாடு படமும் பல பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் கதை பல ரசிகர்களை கவர்ந்துள்ளது.

படம் ஆரம்பித்த நாள் முதலே பல கமெண்ட்கள் வந்தன. அதாவது, படத்தில் பல இடங்களில் நயன்தாராவின் நினைவுச் சின்னங்கள் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நயன்தாராவின் பிறந்தநாளான 18ம் தேதி அன்று மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு ஒன்பதாவது நாற்காலியில் அமர்ந்தார். மாநாடு படத்தின் ஒரு காட்சியில் சிம்பு மற்றும் கல்யாணியின் கார்ட்டூனும் இடம்பெற்றுள்ளது. அவருக்குள் இருக்கும் ஹீரோயின் போட்டோவை பார்த்தால் நயன்தாரா போல் இருக்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தில் நயன்தாராவிற்கு இருப்பது போல் மச்சம் உள்ளது. இது தவிர, ஒரு காட்சியில் அறை எண் 414 என வந்து, ஒன்பது என வரும் அது நயன்தாராவைக் குறிக்கிறது. படத்தின் ஒரு இடத்தில் மூக்குத்தி அம்மன் துணை என்று வருவது நயன்தாரா நடித்த திரைப்படத்தையும் குறிப்பிடுகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே படத்தின் டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் ஒன்பதாம் நம்பர் வரும் படியே இருந்தது இதையெல்லாம் வைத்து நயன்தாராவை நடிகர் சிம்புவால் இன்னும் மறக்க முடியவில்லை என நெட்டிசன்கள் புதிய கருத்தை பரப்பி வருகின்றனர்.