2 October, 2022

கண்ணை கட்டி இன்ப அதிர்ச்சி தருவதாக கழுத்தை அறுத்த மனைவி..!

tamil cinema : இந்தியாவில் தனக்கு விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடு செய்ததால் மணமகனின் கழுத்தை இளம்பெண் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,

ஆந்திர மாநிலம் அனாகபள்ளி மாவட்டம் மாடுகுலப்பள்ளி மண்டலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமாநாயுடு. ஐதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பி.எச்.டி படித்து வருகிறார் ராமா நாயுடுவுக்கும் ராதிக மாட்டம் கிராமத்தை சேர்ந்த புஷ்பா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என புஷ்பா அவரது பெற்றோரிடம் தெரிவித்தபோதும், பெற்றோர் புஷ்பாவுக்கு வலுக்கட்டாயமாக திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

புஷ்பாவின் பெற்றோர் உறவினர்களுக்கு பத்திரிகை வைப்பதற்காக வெளியூர் சென்றதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புஷ்பா மணமகனுக்கு போன் செய்து பரிசு தருவதாக வரவழைத்தார். அங்கு மணமகன் வந்ததும் திருமணத்திற்கு முன்பாக இருவரும் கேக் வெட்டி கொண்டாடலாம் என கூறி ராமாநாயுடுவை அழைத்து கேக் வாங்கிக்கொண்டு புஷ்பா வீட்டிற்கு வந்தனர்.

கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். அதன் பின்னர் இன்ப அதிர்ச்சி தரக்கூடிய பரிசு வழங்க உள்ளதால் கண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும் என மணமகனிடம் புஷ்பா தெரிவித்தார். துப்பட்டாவால் ராமாநாயுடு கண்ணை கட்டிகொண்டதும் தனக்கு பரிசு கிடைக்கும் என்று ராமாநாயுடு ஆவலுடன் இருந்தார். இந்நிலையில் புஷ்பா தான் திட்டமிட்டபடி தயாராக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமாநாயுடு கழுத்தை திடீரென அறுத்ததால் ராமாநாயுடு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அதன்பின்னர் புஷ்பா அவரை அனகா பள்ளியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது டாக்டர்களிடம் ராமாநாயுடு தடுக்கி கத்தியின் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறி வைத்தியசாலையில் சேர்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் பொலிஸாருக்குக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோது நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ராமாநாயுடு அளித்த புகாரின் பேரில் புஷ்பாவை கைது செய்துள்ளனர். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லாததால் இவ்வாறு செய்ததாக புஷ்பா வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.