உன்னோட இந்த ஸைசுக்கு மொடெல் கேக்குதா..? கல்யாணி

0
15

tamil cinema  : பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன்  இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் ஹீரோ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவருக்கு  தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு மக்களின் மனதை கொள்ளை கொண்டார்.

அந்த வகையில் சமீபத்தில், நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ்விற்கு ஜோடியாக நடித்த ”ஹ்ரிதயம்” திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தில் தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட கல்யாணி பிரியதர்ஷன் கடைசியாக மோகன்லாலுடன் இணைந்து ப்ரோடாடி என்ற படத்தில் நடித்து ஹிட் அடித்தது.

தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், தற்போது தள்ளுமால என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வெளிப்படையாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். சிறுவயதில், தான் குண்டாக இருந்ததாகவும், உன் சைஸுக்கு உன்னால் எப்படி மாடலாக முடியும்..? என்று நண்பர்கள் உட்பட பலர் தன்னை கிண்டல் செய்ததாகவும் கல்யாணி தெரிவித்தார்.

அந்த வெறியில் தன்னுடைய உடல் எடையை குறைத்ததாக சொன்ன அவர்,  பல அவமானங்களையும் தாண்டி தற்போது மாடலிங்கை தாண்டி கதாநாயகியாக மாறியுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.