நண்பியை திருமணம் செய்வதற்காக ஆணாக மாறிய பெண்..!

0
17

tamil cinema : இந்திய மாநிலமான தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் அடிக்கடி தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அங்கு செந்திலா என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

செந்திலா ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர்களின் நட்பு காதலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ள முடிவு செய்துள்ளனர்.

காதலியை கரம் பிடிக்க ஜெயசுதா கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதோடு, தனது பெயரையும் ஆதிசிவன் என்வும் மாற்றியுள்ளார்.

இந்நிலையில் இருவரும் மதுரை திருப்பரங்குன்றம் கோவில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனிடையே தனது மகளை காணவில்லை என்று செந்திலாவின் பெற்றோர் தேடி வந்துள்ளனர். இரண்டு மாதங்கள் கழித்து பெற்றோரிடம் வந்த செந்திலா நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரது உடமைகளை எடுத்துச்சென்றதுடன், மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.

tamil cinema
tamil cinema

செந்திலாவின் பெற்றோர் அளித்த புகாரின் உஅடிப்படையில்் பொலிசார் ஆதிசிவன் செந்திலா இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது செந்திலா ஆதி சிவனுடன் வாழ விரும்பவில்லை என்றும் தனது பெற்றோருடன் செல்வதாகவும் செல்வதாகவும் செந்திலா கூறிவிட்டு, அவர்களுடன் சென்றுள்ளார்.

காதலுக்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெற்றோரை எதிர்த்து, வீட்டை விட்டு வந்த தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார் ஆதி சிவன்.