அந்த செய்தியை வாசிக்கும்போது நேரலையில் அழுத வாசிப்பாளர்..!

0
26

tamil cinema : உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்ய துருப்புக்கள் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள புச்சா பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) கவுரவப்படுத்தினார்.

இது தொடர்பான செய்தி ஜப்பானைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பானது.

அப்போது செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ மட்சுவோ, நேரலையிலேயே தடுமாறி அழுதார். பின்னர் நிதானமடைந்த அவர், சிறிது நேரத்திற்கு பின் செய்தி வாசிப்பை தொடங்கினர்.

இந்த காணொளி சமூக வலைதளங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் அந்த செய்தி வாசிப்பாளரைப் போலவே தாங்களும் அழுததாக கருத்து பதிவிட்டுள்ளனர்.