அஜித் வெளியிட்ட அறிக்கை, இனி நான் ‘தல’ கிடையாது, என்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம்..!

0
43

நடிகர் அஜித் குமாருக்கு தமிழ் திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது தயாரிப்பாளர் போனிகபூரின் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் செய்தியாளர்களிடம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா படத்தில் நடிகர் அஜித் நடித்தார். இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் தல.

தீனா படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அவரை தல என்று அழைக்க ஆரம்பித்தனர். அஜீத் குமார் நடித்த அனைத்து படங்களும் தல என்று அழைக்கப்பட்டன. தற்போது அஜித் பற்றி எந்த ஒரு தகவலும் தல என கசிகிறது.

இது குறித்து நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகுந்த மரியாதையுடன் எனது இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் அல்லது ஏ.கே. என்னைப் பற்றி எழுதுவதன் மூலமும், பொதுமக்களுக்காகவும் எனது உண்மையான ரசிகர்களுக்காகவும் எதிர்காலத்தில் என்னைக் குறிப்பிடுகிறேன்.

என்னை தல என்றோ அல்லது வேறு எந்தப் பட்டப் பெயருமோ அழைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை நடிகர் அஜித்தின் மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த செய்தியால் தற்போது அஜித் ரசிகர்கள் அனைவரும் அ தி ர் ச்சியில் உள்ளனர்.

நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தல, தளபதி என சமூக வலைதளங்களில் பல ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.