tamil cinema : பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஃபரா கானின் தி கத்ரா கத்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியை பார்தி சிங் தொகுத்து வழங்குகிறார். பார்தியுடன் சேர்ந்து சாலையில் காசு வாங்கிவிட்டு வரும் டாஸ்கை சாராவுக்கு ஃபரா கான் கொடுத்தார் .
இதையடுத்து பார்தி சிங்குடன் தெருவுக்கு வந்த சாகா அலி கான், காசு கொடுத்தால் என்னுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து இரண்டு பேர் வந்து 20 ரூபாய் கொடுக்க சாரா அலி கான் அதை வாங்க மறுத்துவிட்டார்.
பின்னர் ரிக்ஷா ஓட்டிச் சென்றவரை நிறுத்தி பணம் கேட்க, என்கிட்ட ஏது மேடம் பணம் என்று அவர் சாராவிடம் கூறியுள்ளார்.

இறுதியில் ஒருவர் 100 ரூபாய் கொடுத்து சாராவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தார். மற்றொருவரோ 500 ரூபாய் கொடுத்து சாராவை பாட்டு பாடச் சொன்னார்.
அவரும் காசை வாங்கிக் கொண்டு பாட்டு பாடினார். மேலும் சாரா அந்த வழியாக பைக்கில் வந்தவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றார்.
இதேவேளை, சாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் அத்ரங்கி ரே. ஆனந்த் எல். ராய் இயக்கிய அந்த படத்தில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தார் சாரா என்பது குறிப்பிடத்தக்கது.
