tamil cinema : மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கு புரோக்கர் மூலம் லலிதா என்ற பெண்ணை பார்த்துள்ளனர்.
இந்நிலையில் இருவரது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்ற நிலையில், மாப்பிள்ளை வீட்டில் லலிதா வாழ்ந்து வந்துள்ளார்.
மாப்பிள்ளை வீட்டிற்கு புதுப்பெண்ணாக வந்த லலிதா பல காரணங்களைக் கூறி ராகுலை தனது அருகே வரவிடாமல் தவிர்த்து வந்துள்ளார். லலிதாவின் இந்த நடவடிக்கை ஏழு நாட்கள் வரை தொடர்ந்த நிலையில், ராகுலும் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.
வீட்டில் யாரிடமும் ராகுல் காட்டிக்கொள்ளாத நிலையில், 8வது நாள் லலிதாவினை வீட்டில் காணவில்லை. இந்நிலையில் பதறிப்போன ராகுல் குடும்பத்தினர் அவரை தேடியுள்ளார்.
ராகுல் குடும்பத்திற்கு மற்றொரு அதிர்ச்சியும் வந்து சேர்ந்துள்ளது. வீட்டில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் சுமார் 3 லட்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு லலிதா தப்பிச் சென்றுள்ளது தெரிந்ததும், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ராகுலுக்கு பெண் பார்த்துக் கொடுத்த புரோக்கரையும், பணம், நகைகளுடன் தப்பி ஓடிய பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர்.