6 October, 2022

ஸ்க்ரீன்ஷாட் எடுத்து என்னுடைய பெட்ரூமில் பிரேம் போட்டு மாட்டி வைத்துக் கொள்வேன் என்ற ரசிகர்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை மாளவிகா மோகனன். ரசிகர் ஒருவர் கேட்ட பெட்ரூம் சம்பந்தமான ஒரு கேள்வியை எழுப்ப அதற்கு ஐ லவ் யூ என்று பதில் கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

அப்படி அந்த ரசிகர் என்ன கேள்வி கேட்டார் எதற்காக நடிகை மாளவிகா மோகனன் ஐ லவ் யூ என்று ரிப்ளை செய்தார் என்று இந்த பதிவில் பார்க்கலாம். சமீப காலமாக தமிழ் சினிமாவை நோக்கி வரும் இளம் நடிகைகளின் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

அதில் முக்கியமான ஒரு நடிகை மாளவிகா மோகனன் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பயனாக நடிகர் தனுஷின் திரைப்படத்திலும் நடித்தார் இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தற்போது இந்தியில் உருவாகி வரும் ஆல்பம் பாடல் ஒன்றில் உடை அணிந்து இருக்கிறாரா..? இல்லையா..? என்று சந்தேகம் வரும் அளவிற்கு ஒரு உடையை அணிந்து கொண்டு படு கிளாமராக ஆட்டம் போட்டுள்ளார். அந்த ஆல்பம் பாடல் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய மாளவிகா மோகனனிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து என்னுடைய பெட்ரூமில் பிரேம் போட்டு மாட்டி வைத்துக் கொள்வேன் என்று ஒரு ரசிகர் தன்னுடைய ஆவலை மாளவிகா மோகனன் இடம் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனை பார்த்து பூரித்துப் போன நடிகை மாளவிகா மோகனன் “ஐ லவ் யூ..” என்று அவருடைய பெயரை குறிப்பிட்டு ரிப்ளை செய்துள்ளார்.

Share