குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் என்று நடித்து வந்த இவர் தற்போது திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

0
27

பவித்ரா லக்ஷ்மி : பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த தொடரின் இரண்டாவது சீசனில் மாடல் அழகியான பவித்ரா லட்சுமி கலந்துகொண்டார்.

திருவிழாக்களில் நடனம் ஆடும் நடன குழுவில் குரூப் டான்ஸராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் நடிகை பவித்ரா லட்சுமி. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.

பார்த்தவுடன் பத்திக்கும் கச்சிதமான முகவட்டு, சாக்லேட் நிறம், வாட்டசாட்டமான தோற்றம் என தன்னுடைய முகத்தை பார்த்தாலே சூடேறும் அளவிற்கு படு கிளாமராக இருக்கிறார் பவித்ரா.

எனவே குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் பவித்ரா. குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் என்று நடித்து வந்த இவர் தற்போது திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

அந்த வகையில் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்நிலையில் உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் தன்னுடைய வாய்ப்புகளைத் தேடும் பவித்ரா லட்சுமிக்கு 3 பக்கம் இருந்தும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.