கடல் படத்தில் சின்ன பெண்ணாக இருந்த துளசி நாயரா இது..?

0
25

தன்னுடைய 14வது வயதில் கடல் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை துளசி நாயர். பிரபல நடிகை ராதாவின் மகளான இவர் படத்தில் ஹீரோயினாக நடித்த கார்த்திகாவின் தங்கையுமாவார்.

2013ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களை மிகவும் கவரப்பட்டார் துளசி நாயர்.

அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது. அதன்பிறகு 2014ஆம் ஆண்டு யான் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இரண்டே இரண்டு படங்களில் நடித்திருந்தார் இவர். தொடர்ந்து தன்னுடைய படிப்பை கவனிப்பதற்காக வெளிநாடு பறந்து விட்டார். வெளிநாடு சென்ற துளசி நாயர் அங்கே உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார்.

இதன் பிறகு இவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவது என்பது நடக்காத காரியம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

ஆனால் மீண்டும் சினிமாவில் நடிப்பாரா திரையில் மீண்டும் இவரை பார்க்கலாமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

கடல் படத்தில் சின்ன பெண்ணாக இருந்த துளசி நாயரா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்.