தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக அனைவராலும் பார்க்கப்பட்டவர் நடிகை ஓவியா. ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிரடி காட்ட தமிழ் மக்கள் பெரும் திரளாக கொண்டாடினர்.
அவர் செய்த காரியங்கள், பாடிய பாடல், அவர் சொன்ன வார்த்தைகள் புகழ் பெற்றன. அந்த வார்த்தைகளை மனதில் வைத்து சில பாடல்கள் கூட இயற்றப்பட்டன.
நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சில காலம் ஓவியா ஓவியா என்றே அழைத்த இளைஞர்கள், இப்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கடை திறப்பு விழா என பல விளம்பரங்களில் கலந்து கொண்டார். அவர் ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கினார் என்கிறார்கள்.
ஆனால் இந்த விவரம் எந்த அளவிற்கு சரியானது என்பது தெரியவில்லை.